Dec 2, 2025
Thisaigal NewsYouTube
லஞ்ச ஊழல் வழக்கில் இன்ஸ்பெக்டர் உட்பட 6 போலீசார் கைது
தற்போதைய செய்திகள்

லஞ்ச ஊழல் வழக்கில் இன்ஸ்பெக்டர் உட்பட 6 போலீசார் கைது

Share:

லஞ்சம் பெற்றதற்காக நம்பப்படும் ஒர் இன்ஸ்பெக்டர் உட்பட 6 போலீஸ்காரர்களை, ஆறு நாட்கள் தடுப்பு காவலில் வைப்பதற்கு டெமர்லோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.
ஜெரந்தூட் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணிபுரியும், 24 க்கும் 48 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 6 போலீஸ்காரர்களும், நேற்று மதியம் 2.25 மணியளவில், தெமர்லோ மாவட்டா எஸ்.பி.ஆர்.எம். கிளை அலுவலகத்தில் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 6 சந்தேக நபர்களும் தங்களின் பதவியைப் பயன்படுத்தி, 5 ஆயிரம் வெள்ளி லஞ்சம் பெற்றதாக விசாரனையில் தெரியவந்துள்ளது.

Related News