Dec 4, 2025
Thisaigal NewsYouTube
அனைத்தையும் செய்வதற்கு மித்ரா, பல நோக்கு நிறுவனமா? நாடாளுமன்றத்தில் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார் பிரபாகரன்
தற்போதைய செய்திகள்

அனைத்தையும் செய்வதற்கு மித்ரா, பல நோக்கு நிறுவனமா? நாடாளுமன்றத்தில் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார் பிரபாகரன்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.06-

இந்திய சமுதாயத்திற்கு அனைத்தையும் செய்ய வேண்டிய நிறுவனத்தைப் போல் மிற்றாவைக் கைகா அரசாங்க ஏஜென்சிகளை அதன் சிறப்புப் பணிக் குழுத் தலைவர் பி. பிரபாகரன் இன்று நாடாளுமன்றத்தில் கடுமையாகச் சாடினார்.

மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவான மித்ராவின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட பொறுப்புகளைக் கூட அந்த ஏஜென்சிதான் செய்ய வேண்டும் என்பது போல் அதன் மீது நியாயமற்றச் சுமைகள் ஏற்றப்படுகின்றன என்று பத்து எம்.பி.யான பிரபாகரன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

வரி விலக்கு பிரச்னைகள் உட்பட விளையாட்டுத்துறை மேம்பாடுகள் வரை மித்ராவின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட விவகாரங்களைக் கூட தனிநபர்களும், அரசு நிறுவனங்களும் மித்ராவிடம் கைகாட்டி விடுகின்றனர் என்று பிரபாகரன் குறிப்பிட்டார்.

இந்தியர்களின் ஏழ்மை நிலையைக் களைய சமூகவியல், பொருளாதார உருமாற்றத்திற்காக அமைக்கப்பட்ட ஓர் அரசாங்க ஏஜென்சியான மித்ராவிற்கும் விளையாட்டுத் துறைக்கும் என்ன தொடர்பு என்று பிரபாரகன் கேள்வி எழுப்பினார்.

விளையாட்டுத் துறை என்றால் மித்ரா, சமூக நலன் என்றால் மித்ரா, தொழில்முனைவர் மேம்பாடு என்றால் மித்ரா?

இந்தியச் சமுதாயத்தின் பல்வேறு நோக்கங்களையும், தேவைகளையும் மித்ராவே செய்ய வேண்டும் என்பது போல் அரசாங்க ஏஜென்சிகள் கருதுகின்றன.

இந்தியச் சமுதாயத்தின் அனைத்து தேவைகளையும், பிரச்னைகளையும் என்னால் பூர்த்தி செய்ய முடியும், தீர்க்க முடியும். ஆனால், 500 கோடி ரிங்கிட் அல்லது 5 பில்லியன் ரிங்கிட்டை மித்ராவிற்கு ஒதுக்கீடு செய்யுங்கள். இந்திய சமுதாயம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்னைகளையும் நான் தீர்த்து வைக்கிறேன் என்று பிரபாகரன் சவால் விடுத்தார்.

500 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு செய்வது என்பது நடக்கும் விவகாரமா? சாத்தியமாகுமா? என்று இன்று நாடாளுமன்றத்தில் 13 ஆவது மலேசியத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகையில் பிரபாகரன் தமது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்.

Related News