கோலாலம்பூர், எல்ஆர்டி மாலூரி ரயில் நிலையத்தில் பெண் பயணியை மானபங்கம் செய்ய முயற்சித்தாக நம்பப்படும் ஆடவரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசாரின் ஒத்துழைப்புடன் ரேப்பிட் ரயில் நிறுவனம் அந்த ஆடவரை தேடி வருகிறது. நேற்று வெள்ளிக்கிழமை காலை 7.58 மணியளவில் அந்த ரயில் நிலையத்தின் 1 ஆவது பிளாட்பாரத்திலிருந்து 2 ஆவது பாரத்திற்கு அத்துமீறி நுழைந்த ஓர் ஆடவர் பிளட்பாரத்தில் எல்ஆர்டி ரயிலுக்கு காத்திருந்த பெண்ணியிடம் மானப்பங்கம் செய்ய முயற்சித்துள்ளார். இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. எனினும் இதர பயணிகள், அந்தப் பெண்ணை சம்பந்தப்பட்ட காமூகனிடமிருந்து காப்பாற்றியுள்ளனர். இச்சம்பவத்திற்குப் பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இச்செயலுக்காக ரேப்பிட் ரயில் நிறுவனம் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ள வேளையில் மனோரீதியாக பாதிக்கப்பட்ட அந்ந நபரை தேடும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


