பொந்தியான், டிசம்பர்.14-
நேற்று ஜோகூர், பொந்தியான் மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தின் கட்டமைப்பு பராமரிப்புப் பணியின் போது திடீரென கிரேன் இடிந்து விழுந்த கோர விபத்தில் இரண்டு ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்ததோடு, மேலும் மூன்று தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு ஜோகூர் தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரத் துறை உடனடியாகப் புலனாய்வுக் குழுவை அனுப்பி, மேலும் விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் அந்தப் பணி நடைபெறும் தளத்தை மூடவும், இரண்டு தடை அறிவிப்புகளை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. கிரேன் அமைப்பு இடிந்ததற்கான உண்மைக் காரணத்தைக் கண்டறியத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், 1994 ஆம் ஆண்டுச் சட்டத்தை மீறியவர்கள் மீது கடுமையானச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.








