Oct 9, 2026
Thisaigal NewsYouTube

தலைமை நீதிபதியின் நியமனம், சுதந்திரமாக மேற்கொள்ளப்பட வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தலைமை நீதிபதியின் நியமனம், சுதந்திரமாக மேற்கொள்ளப்பட வேண்டும்

கோலாலம்பூர், ஜூன்.24-

நாட்டின் புதிய தலைமை நீதிபதி நியமனம் சுதந்திரமாக மேற்கொள்ளப்பட வேண்டும். இதில் பிரதமரின் நலன் சார்ந்த அம்சங்கள் இருக்கக்கூடாது என்று பெரிக்காத்தான் நேஷனல் கேட்டுக் கொண்டுள்ளது.

வரும் ஜுலை மாதம், நீதி பரிபாலனத் துறையில் இரண்டு முக்கியப் பதவிகள் காலியாகின்றன. நாட்டின் தலைமை நீதிபதி மற்றும் அப்பீல் நீதிமன்றத் தலைவர் பதவி காலியாகவிருக்கும் நிலையில், புதிய நியமனங்கள், எவ்வித அரசியல் தலையீடுயின்றி நடைபெற வேண்டும் என்று பெரிக்காதான் நேஷனலின் நாடாளுமன்ற கொறடா, டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசான் கேட்டுக் கொண்டார்.

நாட்டின் பிரதமர், நீதிமன்ற வழக்குகளை எதிர்நோக்கியுள்ள வேளையில் தலைமை நீதிபதி நியமனம் குறித்து, அவர் மாமன்னருக்கு ஆலோசனை அல்லது பரிந்துரை வழங்குவது, உசித்தமான செயல் அல்ல என்பதையும் தக்கியுடின் ஹசான் நினைவுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →