Mar 30, 2026
Thisaigal NewsYouTube
54 வயதில் பரதம் நாட்டியத்தில் அரங்கேற்றம் கண்ட மாணவி ஆனந்தி ராமசாமி
தற்போதைய செய்திகள்

54 வயதில் பரதம் நாட்டியத்தில் அரங்கேற்றம் கண்ட மாணவி ஆனந்தி ராமசாமி

Share:

பரதம் பயில வயது தடையில்லை , 54 வயதிலும் தனது நடன பயிற்சியை நிறைவு செய்து அரங்கேற்றம் கண்ட மாணவி குறித்து பெருமைப்படுகிறார் நடன ஆசிரியை ஸ்ரீ மதி உஷா நந்தினி கிருஷ்ணசாமி .

நேற்று ஈப்போவில் தாமான் பெர்த்தாமா சீனப்பள்ளி மண்டபத்தில் 18 வயதுடைய பவித்ரா சுந்திரசேகரன், 17 வயதுடைய வேதாஸ்ரீ ஜெகநாதன் மற்றும் 54 வயதுடைய ஆனந்தி ராமசாமி ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றம் சிறப்புடன் நடைபெற்றது.

ஈப்போவில் சிறப்புடன் செயல் பட்டு வரும் நடப்பள்ளியில் ஒன்றாக திகழும் பெர்சத்துவான் கெபுடாயான் சங்கீத பரத கலாஞ்சலி நாட்டியப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகளின் அரங்கேற்ற நிகழ்வில் 54 வயது குடும்ப மாது ஆனந்தி ராமசாமி அரங்கேற்றம் பலரின் கவனத்தை ஈர்த்தது.

ஈப்போவில் தையல் நிலையத்தை நடத்தி வரும் ஆனந்தி ராமசாமி, பாட்டி அந்தஸ்தை அடைந்தும் இந்த வயதிலும் பரதக் கலையை கற்று அரங்கேற்றம் கண்டது பலரின் கவனத்தை ஈர்த்தது.

பரதநாட்டியம் இந்தியாவின் தொன்மையான செவ்வியல் நடன வடிவங்களில் ஒன்றாகும். இது முறையான அங்க அசைவுகள் , முத்திரைகள் , பாவங்கள் ம ற்றும் தாளக் கட்டுகளுக்கேற்ப அமையும் பாத வேலைப்பாடுகள் மூலம் கதைகளை நயமாக வெளிப்படுத்தும் ஒரு கலை வடிவமாகும்."

பரத நாட்டிய அரங்கேற்றம் என்பது ஒரு பரத நாட்டிய கலைஞரின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நிகழ்வாகும்.

அந்த வகையில் பரத கலையை கற்கும் மாணவர்கள் பலர் பாதியிலேயே கைவிட்டுச் செல்பவர்களும் உள்ளனர்.

இருந்தபோதிலும் திருமணமாகி , மூன்று பிள்ளைகள் , இரண்டு பேத்திகள் உள்ள நிலையில் , பரதக் கலையை கற்று இன்று அரங்கேற்ற நிகழ்வில் பங்கேற்றது மறக்க முடியாது நிகழ்வாக உள்ளதாக ஆனந்தி ராமசாமி கூறினார்.

இந்த நிகழ்விற்கு தேவிஸ்ரீ மகேஸ்வரன் நடனப் பள்ளியைச் சேர்ந்த குரு ஸ்ரீ மதி தேவி மகேஸ்வரன் சிறப்பு வருகை புரிந்தார்.

Related News