கோலாலம்பூர், செப்டம்பர்.18-
சீட் பெல்ட் அணியாத வாகனமோட்டிகள், சோதனைகளின் போது, அதிகாரிகளிடம், ஏதாவது ஒரு சாக்குப் போக்குகளையே சொல்லி வருவதாக ஜேபிஜே தெரிவித்துள்ளது.
அவசரமாகச் செல்லும் நேரத்தில், சீட் பெல்ட் அணிய மறந்து விட்டத்காகவும், ஒரு சிலரோ பழக்கமில்லை என்றும் அதிகாரிகளிடம் காரணமாகச் சொல்வதாகவும் ஜேபிஜே குறிப்பிட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை சுங்கை பீசி டோல் பிளாஸா அருகே கோலாலம்பூர் ஜேபிஜே அதிகாரிகள் மேற்கொண்ட ஓப்ஸ் ஹாஸ் கெம்பூர் கென்ரெடாஆன் பெர்டகாங்கான் நடவடிக்கையின் போது, சீட் பெல்ட் அணியாத 4 வாகனமோட்டிகளுக்கு சம்மன் வழங்கப்பட்டதாக கோலாலம்பூர் ஜேபிஜே இயக்குநர் ஹமிடி அடாம் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், இன்று 203 வர்த்தக வாகனங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 132 வாகனங்களுக்கு சம்மன் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








