கோலாலம்பூர், ஜூலை.26-
துருன் அன்வார் பேரணியில் தலைவர்கள் உரையாடுவதற்குத் திடீரென்று அமைக்கப்பட்ட மேடையை அகற்றும்படி அமலாக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

மலாய்க்காரர்களின் நலனைப் பாதிப்பதாகக் கூறி நகர மறு உருமாற்று புதுப்பிப்புச் சட்டம் தொடர்பாகவே பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று முதலில் கூறப்பட்டாலும் பின்னர் அது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பதவி விலக வேண்டும் என்ற பேரணியாக மாறியுள்ளது.

அந்தப் பேரணியில் தலைவர்கள் உரையாற்றுவதற்கு டத்தாரான் மெர்டோக்கா முன்புறம் திடீரென்று அமைக்கப்பட்ட ரெடிமெட் மேடையை அகற்றும்படி அமலாக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கவிருக்கும் இந்தப் பேரணியில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 18 தலைவர்கள் உரையாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் துன் முகாதீர் முகமது, பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின், பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஆகியோர் உரையாற்றவிருக்கும் முக்கியத் தலைவர்களில் அடங்குவர்.








