மோட்டார் சைக்கிளில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த ஆடவர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று மாலை 6.30 மணியளவில் பந்திங், புக்கீட் சிடிக் தேயிலைத் தோட்டத்தையொட்டிய பகுதியில் நிகழ்ந்தது.
50 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர் சாலையோரத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானதாக கோலலங்காட் மாவட்ட போலீஸ் தலைவரக அமாட் ரிட்வான் பின் முகமட் சலே தெரிவித்தார்.
பந்திங், பண்டார் மக்கோத்தாவில் உள்ள ஒரு தொழிற்சாலைப் பணியாளரான அந்த நபர், கடும் மழைக்கு மத்தியில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியதாக கூறப்படுகிறது. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவ உதவிக்குழுவினர் அந்த ஆடவரை பரிசோதனை செய்ததில் அவர் இறந்து விட்டதாக உறுதி செய்தனர் என்று அமாட் ரிட்வான் குறிப்பிட்டார்.

Related News

போலீஸ் படையின் முன்னாள் நம்பர் 2-க்கு யுடிஇஎம்மில் புதிய பொறுப்பு

2027 பட்ஜெட்டில் சம்பள உயர்வா? ரமணன் சூசகம்

விசா இல்லா வசதியை வேலைக்காக பயன்படுத்த வேண்டாம் – இந்தியப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாக நாடகக் கலைஞர்கள் மீது விசாரணை


