Jun 29, 2026
Thisaigal NewsYouTube
புதிய ஆதாரங்கள் இன்றி ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் தனது தேடுதல் பணியை நிறைவு செய்தது
தற்போதைய செய்திகள்

புதிய ஆதாரங்கள் இன்றி ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் தனது தேடுதல் பணியை நிறைவு செய்தது

Share:

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH370-ஐக் கண்டறியும் நோக்கில் இந்தியப் பெருங்கடலில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய தேடுதல் பணிகளை 'ஓஷன் இன்ஃபினிட்டி' (Ocean Infinity) நிறுவனம் நிறைவு செய்துள்ளது.

இந்தத் தேடுதல் வேட்டையிலும் மாயமான விமானம் குறித்த புதிய தகவல்களோ அல்லது தரவுகளோ கிடைக்கவில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆலிவர் பிளங்கெட், கூறுகையில், "எங்கள் தேடுதல் கப்பல் கடந்த ஜனவரி 23-ஆம் தேதியே அதிகாரப்பூர்வமாக அந்தப் பகுதியிலிருந்து வெளியேறிவிட்டது. 2018-ஆம் ஆண்டு முதல் இந்தத் திட்டத்திற்காக 151 நாட்களைக் கடலில் செலவிட்டுள்ளோம். சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான கடற்பரப்பை வரைபடமாக்கி ஆய்வு செய்துள்ளோம்.

கிடைக்கக்கூடிய ஒவ்வொரு தகவலையும் பயன்படுத்தித் தேடினோம், ஆனால் இவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகும் எங்களால் விமானத்தைக் கண்டறிய முடியவில்லை," என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தத் தேடுதல் பணியானது புவியியல் ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் ஒரு மிகப்பெரிய சவாலான காரியம் என்று குறிப்பிட்ட அவர், "2018-ஆம் ஆண்டில் கற்பனை செய்ய முடியாத வேகத்திலும் துல்லியத்துடனும் இந்த முறை தேடுதல் நடைபெற்றது.

அறிவியல் நுணுக்கங்கள், தானியங்கி தொழில்நுட்பங்கள் மற்றும் ரோபோட்டிக்ஸ் கருவிகளைப் பயன்படுத்தி மிகச் சிறப்பான தேடுதல் வேட்டையை எங்கள் குழு நடத்தியுள்ளது. முடிவுகள் சாதகமாக இல்லாவிட்டாலும், எங்கள் குழுவின் உழைப்பைக் குறித்து நான் பெருமைப்படுகிறேன், என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு