Dec 2, 2025
Thisaigal NewsYouTube
எட்டு நாள் கால அவகாசம் வழங்க இணக்கம்
தற்போதைய செய்திகள்

எட்டு நாள் கால அவகாசம் வழங்க இணக்கம்

Share:

உலு சிலாங்கூர், பாதாங் காளி, செரென்டா, கம்போங் தம்பாஹான் மக்களின் வீடுகள் உடைக்கப்படுவதிலிருந்து 8 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேம்பாட்டளர் நிறுவனத்துடன் மூடா கட்சியின் சிலாங்கூர் மாநிலத் துணைத் தலைவரும் உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி தலைவருமான டாக்டர் ரா. சிவபிரகாஷ் நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக வீடு உடைக்கப்படும் நடவடிக்கையைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க மேம்பாட்டாளர் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்ட வீடுகளுக்கு நேற்று மாலை 4 மணியளவில் மீண்டும் மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சம்பந்தப்பட்ட மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர். தவிர, நேற்று முன்தினம் உடைக்கப்பட்ட 6 வீடுகள் மக்கள் குடியிருக்காத காலி வீடுகளாகும் என்பதையும் டாக்டர் சிவபிரகாஷ் தெளிவுபடுத்தினார்.

பாதிக்கப்பட்ட அந்த 12 குடும்பங்களின் நலன்களும் பாதுகாக்கப்படுவதை எல்லா நிலைகளிலும் உறுதி செய்யப்படும். தவிர அவர்களுக்கு மூடா கட்சி ஆதரவாக இருக்கும் என்பதுடன் தேவையான உதவிகளை நல்கி வரும் என்று டாக்டர் சிவபிரகாஷ் உறுதிகூறினார்.

Related News