May 24, 2026
Thisaigal NewsYouTube
ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைகிறது
தற்போதைய செய்திகள்

ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைகிறது

Share:

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 04-

கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மலெசிய ரிங்கிட் மதிப்பு தற்போது வலுவடையத் தொடங்கியிருப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

ஒற்றுமை அரசாங்கத்தின் கொள்கை மற்றும் ஒருமித்த கருத்து இணக்கம் ஒன்றிணைந்து நாட்டை மேம்படுத்தி வருகிறது என்று நிதி அமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

ரிங்கிட்டின் மதிப்பு சரிவு கண்டு வருவதாக எதிர்கட்சியினர் அடிக்கடி வாதிட்டு வருகின்றனர். தற்போதைய ஒற்றுமை அரசாங்க தலைமைத்துவத்தின் கீழ் பொருளியல் மீட்சிக்கான சாதகமான அம்சங்கள் கைகூடி வருகின்றன என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

ஆசியாவிலேயே தொடர்ந்து வலிமை அடைந்து வரும் நாணயமாக ரிங்கிட் விளங்கி வருகிறது. இதற்கு இந்த அன்வார் காரணம் அல்ல. மாறாக, அரசாங்கத்தின் ஒருமித்த கொள்கையாகும் என்று பிரதமர் விளக்கினார்

Related News