Aug 12, 2026
Thisaigal NewsYouTube
நாயை மோதுவதிலிருந்து தவிர்த்த ஆடவர் உயிரிழந்தார், மனைவி படுகாயம்
தற்போதைய செய்திகள்

நாயை மோதுவதிலிருந்து தவிர்த்த ஆடவர் உயிரிழந்தார், மனைவி படுகாயம்

Share:

சிகமாட், மே.23-

சாலையில் திடீரென்று குறுக்கே சென்ற நாய் ஒன்றை மோதுவதிலிருந்து தவிர்க்க, வாகனத்தைத் திருப்பியதில், வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், லோரியுடன் மோதியதில், நபர் ஒருவர் உயிரிழந்த வேளையில் அவரின் மனைவி கடும் காயங்களுக்கு ஆளானார்.

இந்தச் சம்பவம் நேற்று மாலை 6.30 மணியளவில் ஜோகூர், ஜாலான் மூவார்-சிகமாட் சாலையின் 56 கிலோமீட்டரில் சிகமாட் அருகில் நிகழ்ந்தது.

அத்தம்பதியர் பயணித்த எஸ்யுவி ரக வாகனம், லோரியுடன் மோதியதில் வாகனத்தில் அமர்ந்திருந்த தாமான் மிடாவைச் சேர்ந்த 37 வயது டேவிட் சுஸ்ஸாஸ் உயிரிழந்த வேளையில், வாகனத்தைச் செலுத்திய அவரின் 36 வயது மனைவி பி. வனிதா கடும் காயங்களுக்கு ஆளாகினார்.

தம்பதியர் பயணித்த நிசான் ஏஈண்-டிரேயில் வாகனம், ஸ்கானியா ரக லோரியின் பின்புறம் மோதியதாக சிகமாட் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் ஸம்ரி மரின்சா தெரிவித்தார்.

அந்தத் தம்பதியர், மூவாரிலிருந்து சிகமாட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதில் கடும் காயங்களுக்கு ஆளாகிய வனிதா, சிகமாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அஹ்மாட் ஸம்ரி தெரிவித்தார்.

Related News

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு