Oct 16, 2026
Thisaigal NewsYouTube

ரத்தவெள்ளத்தில் ஆடவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ரத்தவெள்ளத்தில் ஆடவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது

நவ. 23-

மலாக்கா, ஆயர் குரோவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் தங்கும் அறையில் ஆடவர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது இன்று பிற்பகல் 3.20 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டது.

சபாவைச் சேர்ந்த 40 வயதுடைய அந்த நபர், இறந்து சில நாட்கள் இருக்கலாம் என்று நம்ப்படுகிறது. அந்த கல்லூரியின் பாதுகாவலராக வேலை செய்து வந்த அந்த அந்த நபர், கடந்த இரண்டு நாட்களாக மருத்துவ விடுப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இன்று வேலைக்கு திரும்ப வேண்டியவர், வராததால் சந்தேகித்த சகப் பணியாளர், அவரின் அறைக்கு சென்று பார்த்த போது அவர் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

சம்பவம் நிகழ்ந்த இடத்தில் போலீசார் தடயவியல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து இதுவரை போலீசார் எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →