மத்திய அரசாங்கத்தின் தேசிய தினத்திற்கு முரணாக சொந்த சின்னத்தை பயன்படுத்தி மக்களிடையே பிளவுகளையும், பேதங்களையும் ஏற்படுத்த வேண்டாம் என்று தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் கேட்டுக்கொண்டார்.
இது போன்ற நடவடிக்கைககள் தேவையின்றி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அதேவேளையில், மக்களிடையே பிளவுகளையும், பேதங்களையும் ஏற்படுத்தி, மனதில் வெறுப்புணர்ச்சியை விதைக்க வகை செய்யும் என்று அவர் எச்சரித்தார்.
தேசியத் தினத்தின் மைய கருப்பொருளை பணயம் வைத்து , இதில் யார் பலசாலி என்பதை நிரூபிப்பதற்கு இது ஆடுகளம் அல்ல. அறிவு சார்ந்த தளம். அவரவர் தத்தம் அரசியல் சித்தாந்தஙகளையும், கருத்து வேறுபாடுகளையும் சற்று ஒதுக்கி வைத்து விட்டு, நமது முன்னோர்கள் பெற்றுத் தந்த சுதந்திரக் காற்றுக்கு மரியாதையும், விசுவாசத்தையும் செலுத்த ஒரே கருப்பொருள், ஒரே சின்னம், ஒரே எண்ணம் என்ற நிலையில் ஒன்றுப்பட்டு இருப்போம், ஒருமைப்பாட்டை காப்போம் என்று ஆரோன் அகோ டகாங் வலியுறுத்தினார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


