Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பிராசிகியூஷன் 13 காரணங்களை முன் வைத்துள்ளது
தற்போதைய செய்திகள்

பிராசிகியூஷன் 13 காரணங்களை முன் வைத்துள்ளது

Share:

பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து பிராசிகியூஷன் செய்து கொண்ட மேல்முறையீட்டில் அவர் ஏன் விடுதலை செய்யப்பட்டு இருக்கக்கூடாது என்பதற்கு 13 காரணங்களை முன்வைத்துள்ளது.

முகைதீன் நாட்டின் பிரதமராக இருந்த போது தனது தலைமையிலான பெர்சத்து கட்சியின் வங்கிக்கணக்கிற்கு ஜன விபாவா நிதியிலிருந்து 23 கோடியே 25 லட்சம் வெள்ளி நிதியை மடை மாற்றம் செய்ததில் தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்று அவருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

எனினும் முகைதீனுக்கு எதிரான நான்கு குற்றச்சாட்டுகளில் அடிப்படை முகாந்திரங்கள் இல்லை என்று கூறி அவரை விடுதலை செய்து இருப்பது மூலம் விசாரணை நீதிபதி ஜமீல் ஹுசின் தவறு இழைத்துள்ளார் என்று பிராசிகியூன் தரப்பு தனது மேல்முறையீட்டில் தெரிவித்துள்ளது.

Related News