Dec 2, 2025
Thisaigal NewsYouTube
லஞ்ச ஊழல் தொடர்பில் மனித வள அமைச்சர் சிவக்குமாரின் பெண் செயலாளர் கைது
தற்போதைய செய்திகள்

லஞ்ச ஊழல் தொடர்பில் மனித வள அமைச்சர் சிவக்குமாரின் பெண் செயலாளர் கைது

Share:

லஞ்ச ஊழல் தொடர்பில், மனித வள அமைச்சர் வி. சிவக்குமாரின் அந்தரங்க செயலாளர் என்று நம்பப்படும் பெண் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்துடன், அமைச்சர் சிவக்குமாரின் வலது கரமாக விளங்கிய இரண்டு முக்கிய அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். கைது செய்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை காலை 9 மணியளவில், புத்ராஜெயாவில் உள்ள மனிதவள அமைச்சின் அலுவலகத்தில் அமைச்சர் சிவக்குமாரின் சிறப்பு ஆண் அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ள வேளையில், இன்று மதியம் ஒரு மணியளவில் அவரின் அந்தரங்க செயலாளரான பெண் அதிகாரியை எஸ்.பி.ஆர்.எம். கைதுசெய்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட இருவரும், அமைச்சர் சிவக்குமார் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பத்து காஜாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். அதே வேளையில், இன்று கைதுசெய்யப்பட்ட பெண் அதிகாரி, தஞ்சோங் மாலிமில் புரோட்டோன் நிறுவனத்தின் முன்னாள் ஏஜெண்டாக செயல்பட்டவர் என்று நம்பப்படுகிறது.

அந்நியத் தொழிலாளர்கள் தருவிப்பு நிறுவனம் சம்பந்தப்பட்ட 9 கோடியே 7 லட்சம் லஞ்ச ஊழல் தொடர்பில், விசாரணை வலையை வீசியுள்ள எஸ்.பி.ஆர்.எம்., அமைச்சரின் இரண்டு முக்கிய அதிகாரிகள் உட்பட இதுவரையில் மூவரை கைது செய்துள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கை தொடரும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில், சிவக்குமாரின் அந்தரங்க செயலாளர் கைது செய்யப்பட்டதை எஸ்.பி.ஆர்.எம். மின் தலைமை ஆணையர் அஸாம் பாக்கி உறுதிப்படுத்தியுள்ளார்.

சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணையில், அவர் எத்தனை நாட்களுக்குத் தடுத்து வைக்கப்படுவார் என்பது குறித்து தமக்கு உறுதியாக தெரியவில்லை என்று அஸாம் பாக்கி விளக்கினார். கைதுசெய்யப்பட்ட மூவரில், ஈப்போவைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரும் அடங்குவர்.

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் ஆட்சி அமைத்த இந்த ஆறு மாதக் காலத்தில், லஞ்ச ஊழல் தொடர்பில், அமைச்சர் ஒருவரின் முக்கிய அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்