ஷா ஆலாம், ஆகஸ்ட்.16-
கடந்த புதன்கிழமை புத்ராஜெயாவில் உள்ள ஒரு பேரங்காடி மையத்தில் முன்னாள் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லியின் 12 வயது மகன் தாக்கப்பட்ட சம்பவத்தில் சந்தேகப் பேர்வழிகளை அடையாளம் காண்பதற்கு சில துப்புகள் கிடைத்துள்ளன என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் ஷாஸேலி காஹார் தெரிவித்தார்.
சம்பவம் நிகழ்ந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமரா பதிவின் மூலம் கிடைக்கப் பெற்ற சில ஆதாரங்களை ஆராய்ந்து பார்த்ததில் புதிய துப்புகள் கிடைத்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
புலன் விசாரணைக்கு உதவ இதுவரையில் 17 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் இந்தச் சம்பவம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள மிரட்டல் குறித்து ரஃபிஸி போலீசில் புகார் செய்துள்ளதாக ஷாஸேலி காஹார் மேலும் கூறினார்.








