கோல லங்காட், சுங்கை ஜாரோம் போலீஸ் நிலையத்திற்கு அருகில் இந்திய ஆடவர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக மாவட்ட போலீஸ் தலைவர் சுபரிதென்டன் அமாட் ரிட்வான் முகமட் நூர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் அளித்துள்ள தகவல்களின்படி இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நான்கு நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக அகமட் ரிட்வான் குறிப்பிட்டார்.
கருப்பு நிற முகப்பு கண்ணாடி கொண்ட தலைக்கவசம் அணிந்திருந்த நால்வர், அவ்விடத்தில் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட நபர் சுடப்பட்டதற்கான பின்னணியைத் தாங்கள் தொடர்ந்து புலன் விசாரணை செய்து வருவதாக அகமட் ரிட்வான் மேலும் கூறினார்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் நிகழ்ந்த இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 39 வயது வசந்தகுமார் மயில்வாகனம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜாலான் பந்திங், சுங்கை சீடுவை சேர்ந்த வசந்தகுமார் மயில்வாகனத்தின் தலையிலும், கழுத்திலும் 4 துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருந்தன. அவர் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் போலீஸ் துறையில் 13 கிரிமினல் பதிவுகளை கொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அகமட் ரிட்வான் குறிப்பிட்டார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


