Jul 31, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் பலாத்காரம், மாற்றுத்திறனாளி மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பாலியல் பலாத்காரம், மாற்றுத்திறனாளி மீது குற்றச்சாட்டு

Share:

தனது உறவுக்காரப் பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக பதின்ம வயதுடைய மாற்றுத் திறனாளி மாணவன் ஒருவன், மூவார், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டான்.

இரண்டாம் படிவ மாணவனான அந்த மாற்றுத் திறனாளிக்கு எதிராக கொண்டு வரபட்டுள்ள இரண்டு பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளையும் அந்த மாணவன் ஒப்பியதைத் தொடர்ந்து வரும் ஜனவரி 13 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று மாஜிஸ்திரேட் ஃபாத்தின் டலிலா காலிட் தெரிவித்தார்.

கடந்த ஜுலை மாதம் மூவாரில் 13 வயது தனது உறவுக்காரப் பெண்ணை பாலியல் ரீதியாக வல்லுறவு மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அந்த மாற்றுத் திறனாளி,குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் இரு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளான்.

Related News