கட்டுமானத் தளத்தில் தாங்கள் ஓய்வெடுப்பதற்கு பயன்படுத்தி வந்த கொள்கலன் கேபின் ஒன்றில் மூன்று மியன்மார் பிரஜைகள் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. பகாங், ரொம்பின், ஜாலான் அங்கரிக்கில் ஒரு கட்டுமானத்தளத்தில் அந்த முவரும் இறந்து கிடந்தது தொடர்பில் அன்றைய தினம் மாலை 3.15 மணியளவில் தாங்கள் தகவல் பெற்றதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோ செரி யஹாயா ஒத்மான் தெரிவித்தார்
விஷத்தன்மை காரணமாக அவர்கள் உயிரிழந்து இருக்கலாம் என்று நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார். எனினும் அவர்கள் உடலில் எவ்வாறு விஷயத்தன்மை கலந்தது என்பது குறித்து சவப்பிரசோதனைக்கு பின்னரே தெரியவரும் என்று யஹாயா தெரிவித்தார்.
21 க்கும் 33 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூவரின் இறப்பு, திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.








