Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஒரு கோடி ரிங்கிட் மதிப்புள்ள கஞ்சாப் பூ பறிமுதல்
தற்போதைய செய்திகள்

ஒரு கோடி ரிங்கிட் மதிப்புள்ள கஞ்சாப் பூ பறிமுதல்

Share:

கோத்தா பாரு, ஜூலை.28-

கிளந்தான், ரந்தாவ் பஞ்சாங்கில் சுங்கத்துறை மேற்கொண்ட அதிரடிச் சோதனை நடவடிக்கையில் ஒரு கோடி ரிங்கிட் மதிப்புள்ள 102 கிலோ எடை கொண்ட கஞ்சாப் பூ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரந்தாவ் பங்சாங் பேருந்து நிலையத்திலும், தீர்வையற்றப் பகுதியிலும் நின்று கொண்டு இருந்த இரண்டு பெண்கள் மற்றும் ஓர் ஆடவரைச் சுங்கத்துறை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது பெரிய அளவிலான கஞ்சாப் பூ பறிமுதல் செய்யப்பட்டதாக கிளந்தான் மாநில சுங்கத்துறை இயக்குநர் வான் ஜமால் அப்துல் சலாம் வான் லோங் தெரிவித்தார்.

முதல் சோதனை கடந்த வாரம் புதன்கிழமை காலை 10.30 மணிக்கு தீர்வையற்றப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. அங்கே கைவிடப்பட்ட ஒரு பை கைப்பற்றப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு பெண், சிறு பொட்டலங்களாக 32 பாக்கேட்டுகளில் கஞ்சாப் பூவை விட்டுச் சென்றதது அவரைக் கைது செய்ய பின்னர் தெரியவந்தது.

அந்தப் பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்னர் மேலும் ஓர் ஆணும், பெண்ணும் ரந்தாவ் பஞ்சாங் பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 60 பாக்கேட்டுகளை உள்ளடக்கிய கஞ்சாப் பூவைக் கொண்ட மேலும் இரண்டு பைகள் கைப்பற்றப்பட்டதாக வான் ஜமால் அப்துல் சலாம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News