Oct 17, 2026
Thisaigal NewsYouTube

துன் டாயிம் ஜைனுதீன் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
துன் டாயிம் ஜைனுதீன் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

கோலாலம்பூர், நவ. 13-


முன்னாள் நிதி அமைச்சர் துன் டாயிம் ஜைனுதீன் மறைவிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.
டாயிம் ஜைனுதீன் குடும்பத்தினருக்கு தமது அனுதாபத்தையும் பிரதமர் தெரிவித்துக்கொண்டார்.

தென் அமெரிக்க நாடான பெருவில் நடைபெறவிருக்கும் ஆசிய பசிபிக் பொருளாதார உச்சநிலை மாநாடான ஏபெக்கில் கலந்து கொள்வதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், தலைநகர் லீமாவை வந்தடைந்த போது, துன் டாயிமின் மறைவு செய்தி, கிடைத்ததாக குறிப்பிட்டார்.

நாட்டின் நிதி அமைச்சராக துன் டாயிம் பொறுப்பு வகித்த போது அவர் ஆற்றிய பங்களிப்பை அரசாங்கம் நினைவுகூரும் அதேவேளையில் உரிய அங்கீகாரத்தையும் வழங்குவதாக பிரதமர் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →