Dec 2, 2025
Thisaigal NewsYouTube
10,109 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் ‘A’
தற்போதைய செய்திகள்

10,109 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் ‘A’

Share:

2022 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம். தேர்வு முடிவுகள், இன்று காலை 10 மணியளவில் வெளியிடப்பட்ட நிலையில், நாடு முழுவதும் மொத்தம் 3 லட்சத்து 73 ஆயிரத்து தொல்லாயிரத்து 74 மாணவர்கள் எஸ்.பி.எம். தேர்வினை எழுதிய வேளையில், 10,109 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் ‘A’ பெற்று சிறந்த அடைவு நிலையைப் பதிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ பக்ருட்டின் கசாலி தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி முதல் மார்ச் 15 ஆம் தேதி வரை நடைபெற்ற எஸ்.பி.எம். தேர்வில், 75,322 அல்லது 20.1 விடுக்காடு மாணவர்கள் சிறப்பு தேர்வு முடிவுகளையும், 126,793 பேர் குறைந்தது ஒரு பாடத்தில் தோல்வியடைந்தும் உள்ளதாக பக்ருட்டின் கசாலி குறிப்பிட்டார்.

Related News