சுங்கை பூலோ, ஜூலை.23-
நாய்கள் கடித்து குதறியிருக்கலாம் என்று நம்பப்படும் ஒரு வயது 7 மாதமே ஆனச் சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். இந்தச் சம்பவம் நேற்று சுங்கை பூலோவில் உள்ள ஒரு அஸ்லி கிராமத்தில் நிகழ்ந்தது.
உடலில் கடுமையானக் காயங்களுடன் சுங்கை பூலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்தச் சிறுவன், உயிரிழந்தது குறித்து நேற்று காலையில் மருத்துவ அதிகாரியிடமிருந்து தாங்கள் புகார் பெற்றதாக மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஹாஃபிஸ் முகமட் நோர் தெரிவித்தார்.
ஆபத்து அவசரப் பிரிவில் சேர்க்கப்பட்ட அந்தச் சிறுவன் சுயநினைவும் திரும்பாத நிலையில் காலை 9.14 மணியளவில் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அந்தச் சிறுவனை ஒன்றுக்கும் மேற்பட்ட அதிகமான நாய்கள் கடித்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.








