உலகை மிரட்டி வரும் மற்றொரு அபாயகர நோய்த் தொற்றான எக்ஸ் நோய் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கும் அதனை சமாளிப்பதற்கும் சுகாதார அமைச்சு தயார் நிலையில் உள்ளது என்று அதன் துணை அமைச்சர லுகானிஸ்மேன் அவாங் சௌனி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கோவிட் -19 நோய்த்தொற்றை கையாண்ட அனுபவத்தை மலேசியா கொண்டு இருப்பதால் ஆப்பிரிக்காவில் பரவியுள்ள எக்ஸ் நோய்த் தொற்று அச்சுறுத்தலையும் எதிர்கொள்வதற்கு சுகாதார அமைச்சு தயார் நிலையில் உள்ளதாக லுகானிஸ்மேன் அவாங் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் - 19 நோய்த் தொற்றைவிட மிகவும் அபாயகரமானது என்று எக்ஸ் நோய் குறித்து விமர்சிக்கப்பட்டாலும் அதன் விரியத் தன்மை இதுவரையில் உறுதி செய்யப்படவிலை என்று துணை அமைச்சர் விளக்கினார்.








