Mar 11, 2026
Thisaigal NewsYouTube
போதைப் பொருள் உட்கொண்ட 25 மீனவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

போதைப் பொருள் உட்கொண்ட 25 மீனவர்கள் கைது

Share:

இன்று கோல கெடா கடல் பகுதியில் நடத்தப்பட்ட ஓபி பெர்செபாடு சோதனையின்போது போதைப் பொருள் உட்கொண்டு துறைமுகப் பகுதிகளிலும் படகுகளிலும் இருந்த 25 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மரிதிம் மலேசியாவின் கோல கெடா பகுதியின் இயக்குநர் கொமான்டர் மரிதிம் நோர் அஸ்ரியாந்தி இஷாக் தெரிவிக்கயில், தமது தரப்பும் மலேசிய போதைப் பொருள் தடுப்பு நிறுவனமான ஏஏடிகேவின் அதிகாரிகளும் இணைந்து இந்தச் சோதனையை நடத்தியதாகக் குறிப்பிட்டார்.

தடுத்து வைக்கப்பட்ட 20 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களை ஏஏடிகேவிடம் ஒப்படைத்திருப்பதாகவும் அவர்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்வார்கள் எனவும் நோர் அஷ்ரியாந்தி இஷாக் கூறினார்.

மீனவர்களிடையே போதைப் பொருள் நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகவும் இது போன்ற சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளை மரிதிம் மலேசியாவின் ஒரு போதும் அனுமதிக்காது எனவும் அவர் மேலும் சொன்னார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து