Oct 16, 2026
Thisaigal NewsYouTube

51 வயது தந்தைக்கு 32 ஆண்டு சிறைத் தண்டனை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
51 வயது தந்தைக்கு 32 ஆண்டு சிறைத் தண்டனை

புத்ராஜெயா, நவ. 25-


ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, வயது குறைந்த தனது மகளை பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்திற்காக தந்தை ஒருவருக்கு புத்ராஜெயா, அப்பீல் நீதிமன்றம் 32 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.

அத்துடன் 51 வயதுடைய அந்த நபருக்கு 22 பிரம்படித் தண்டனையும் விதித்தது. செஷன்ஸ் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் ஒரே சாட்சி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை கொடுக்கப்பட்டாலும், அந்த சாட்சி நம்பகமிகுந்த சாட்சியாக இருப்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்வதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நீதிபதி டத்தோ அகமட் ஸையிடி இப்ராஹிம் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

சம்ந்தப்பட்ட நபர் கடந்த கடந்த 2019 ஆம் ஆண்டு திரெங்கானு, கோலபெராங்கில் உள்ள தமது வீட்டில் தமது 15 வயது மகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →