கோலாலம்பூர், டிசம்பர்.23-
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரதான நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் 50 விழுக்காடு தள்ளுபடி இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இன்று அதிகாலை 12.01 மணிக்குத் தொடங்கி இந்தச் சலுகை இரவு 11.59 மணிக்கு முடிவுறும் வேளையில் நாளை புதன்கிழமை அதிகாலை 12.01 மணிக்குத் தொடங்கி இரவு 11.59 மணிக்கு முடிவுறுவதாக வடக்கு தெற்கு நெடுஞ்சாலை வாரியமான பிளஸ் தெரிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இரண்டு தினங்களுக்கு டோல் கட்டணத்தில் 50 விழுக்காடு தள்ளுபடி வழங்குவதாக பிளஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.








