Oct 13, 2026
Thisaigal NewsYouTube

அடுத்த ஆண்டு 41 டிகிரி செல்சியஸைக் கடக்குமா வெப்பநிலை? ‘சூப்பர் எல் நினோ’ குறித்து எச்சரிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அடுத்த ஆண்டு 41 டிகிரி செல்சியஸைக் கடக்குமா வெப்பநிலை? ‘சூப்பர் எல் நினோ’ குறித்து எச்சரிக்கை

மலேசியாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் மே மாதம் வரை கடுமையான வெப்பம் நிலவக்கூடும் என்றும், வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் மலேசிய வானிலை ஆய்வுத் துறையான மெட் மலேசியாவின் தலைமை இயக்குநர் ஹிஷாம் அனிப் எச்சரித்துள்ளார்.

1998ஆம் ஆண்டு பெர்லிஸ், சூப்பிங்கில் பதிவான 40.1 டிகிரி செல்சியஸே நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை சாதனையாக உள்ளது. வலுவான எல் நினோவும் பருவநிலை மாற்றமும் இணைந்தால், இந்தச் சாதனை முறியடிக்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

வெப்பம் அதிகரிப்பதால் மழையின்றி நீண்டகால வறட்சி, நீர்த்தேக்கங்களில் நீர்மட்டக் குறைவு, மின்சாரத் தேவை அதிகரிப்பு ஆகிய பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், வடகிழக்குப் பருவமழைக் காலத்திலேயே நீர்த்தேக்கங்களை நிரப்புவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →