Oct 16, 2026
Thisaigal NewsYouTube

இரு அதிகாரிகள் விரைவில் குற்றஞ்சாட்டப்படுவர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இரு அதிகாரிகள் விரைவில் குற்றஞ்சாட்டப்படுவர்

கோலாலம்பூர், டிச.9-


கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அந்நிய நாட்டவர்கள் எவ்வித சோதனையின்றி நுழைவதற்கும், வெளியேறுதற்கு குடிநுழைத்துறை சோதனை சாவடியில் செட்டிங் முறையை அமைத்த இரண்டு குடிநுழைவு அதிகாரிகள் விரைவில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கின்றனர்.

செட்டிங் முறை அமைப்பதற்கு மூளையாக இருந்து செயல்பட்டதாக நம்பப்படும் அந்த இரு அதிகாரிகளும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்கு ஏதுவாக விசாரணை அறிக்கை, துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.

50 க்கும் மேற்பட்ட குடிநுழைவும் அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட இந்த விசாரணையில் குடிநுழைவுத்துறையிடம் காணப்படும் 11 பலவீனங்களையும் தங்கள் ஆணையம் அடையாளம் கண்டுள்ளதாக அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →