Oct 9, 2026
Thisaigal NewsYouTube

26 வயது பெண் ஹோட்டலிலிருந்து கீழே விழுந்து மரணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
26 வயது பெண் ஹோட்டலிலிருந்து கீழே விழுந்து மரணம்

சிரம்பான், ஜூன்.26-

26 வயது பெண் ஹோட்டல் ஒன்றின் எட்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று மாலை 6.30 மணியளவில் போர்ட்டிக்சனின் உள்ள ஒரு ஹோட்டலில் நிகழ்ந்தது.

இது குறித்து அவசர அழைப்பைப் பெற்ற தீயணைப்பு, மீட்புப்படையினர், அவ்விடத்திற்கு விரைந்த போது, பெண் ஒருவர் கடும் காயங்களுடன் இறந்து கிடந்தது தெரிய வந்தது என்று போர்ட்டிக்சன் தீயணைப்பு நிலையத் தலைவர் கமால் திமார் தெரிவித்தார்.

அந்தப் பெண் எட்டாவது மாடியில் பால்கனியில் இருந்து கீழே விழுந்துள்ளார் என்று நம்பப்படுகிறது.

போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் மஸ்லான் உடின் கூறுகையில் இது குறித்து தாங்கள் தீவிரமாக விசாரணை செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →