ஜோகூர் பாரு, ஜனவரி.25-
மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் அவர்கள், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் சிறப்பு அழைப்பை ஏற்று அந்நாட்டின் Saint Petersburg நகருக்கு இன்று சிறப்புப் பயணத்தைத் தொடங்கினார். ஜோகூர், செனாய் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து இன்று காலை 8.25 மணியளவில் பேரரசரின் தனி விமானம் ரஷ்யா நோக்கிப் புறப்பட்டது.
பேரரசரை வழிப்பனுப்ப இளவரசர் துங்கு மாஹ்கோத்தா இஸ்மாயிலும் துங்கு இட் ரிஸ் இஸ்கண்டார் அல்-ஹாஜ்ஜும் விமான நிலையம் வருகை தந்திருந்தனர். இன்று தொடங்கி அடுத்த செவ்வாய்க்கிழமை வரை நடைபெறவுள்ள இந்த அதிகாரப்பூர்வப் பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.








