Oct 9, 2026
Thisaigal NewsYouTube

விபத்தில் மாது மற்றும் இரண்டு சிறார்கள் காயமுற்றனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விபத்தில் மாது மற்றும் இரண்டு சிறார்கள் காயமுற்றனர்

ஈப்போ, ஜூலை.01-

பேரா, ஜாலான் பாகான் செராயில் இரண்டு வாகனங்கள் எதிரும் புதிருமாக மோதிக் கொண்டதில் மாது மற்றும் இரண்டு சிறார்கள் காயமுற்றனர்.

இந்தச் சம்பவம் இன்று காலை 6. 50 மணியளவில் நிகழ்ந்தது என்று பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் சபாரோட்ஸி நோர் அஹ்மாட் தெரிவித்தார்.

நிசான் அல்மேரா ரகக் காரைச் செலுத்திய 40 வயது மதிக்கத்தக்க மாது மற்றும் அவரின் காரில் இருந்த 2 க்கும் 12 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று பிள்ளைகள் இருந்தனர். இதில் இரு பிள்ளைகள் காயமுற்றதாக அவர் குறிப்பிட்டார்.

மாது செலுத்திய கார், எதிரே வந்த புரோட்டோன் பெர்சோனா ரகக் காருடன் எதிரும் புதிருமாக மோதியதாகக் கூறப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →