Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஆபாச உள்ளடக்க வீடியோக்கள் விற்பனை: பல்கலைக்கழக மாணவனுக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்
தற்போதைய செய்திகள்

ஆபாச உள்ளடக்க வீடியோக்கள் விற்பனை: பல்கலைக்கழக மாணவனுக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

Share:

சிப்பாங், அக்டோபர்.09-

கடந்த ஆண்டு வர்த்தக நோக்கில் ஆபாச உள்ளடக்க வீடியோப் படங்களை விற்பனை செய்து வந்த குற்றத்திற்காக பல்லைக்கழக மாணவன் ஒருவனுக்கு சிப்பாங் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.

24 வயது முகமட் அய்டில் அக்மால் அஸார் என்ற அந்த மாணவன், அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் 6 மாத சிறைத் தண்டனை விதிப்பதாக நீதிபதி அஹ்மாட் ஃபுவாட் ஒத்மான் தெரிவித்தார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு மாரச் முதல் தேதி இரவு 10.45 மணியளவில் சிலாங்கூர், ஷா ஆலாமில் உள்ள தனது வீட்டில் @sanomanji89 என்ற சமூக ஊடகக் கணக்கின் வாயிலாக அந்த மாணவன் ஆபாச உள்ளடக்கங்களை விற்பனை செய்து வந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

1998 ஆம் ஆண்டு தொர்பு மற்றும் பல்லூடக ஆணைய சட்டத்தின் கீழ் அந்த மாணவன் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார். முன்னதாக, அந்த மாணவனுக்கு கடும் தண்டளை விதிக்குமாறு அரசு தரப்பு வழக்கறிஞர் ஃபாடில் அப்துல் வாஹாப் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

Related News