May 22, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோதமாக வனப்பகுதியில் நுழைந்ததற்காக 8 பேருக்கு தலா வெ.7,000 அபராதம்
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதமாக வனப்பகுதியில் நுழைந்ததற்காக 8 பேருக்கு தலா வெ.7,000 அபராதம்

Share:

பேராக், மே 09-

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சட்டவிரோதமாக வனப்பகுதிக்குள் நுழைந்ததற்காக 8 பேருக்கு தலா 7 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்க கோலா கங்சார் செஷனஸ் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

35 க்கும் 55 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த எட்டு மலாய் ஆடவர்கள் நீதிபதி ரொஹைதா இஷாக் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அக்குற்றத்தை ஒப்புக் கொண்டதை தொடர்ந்து அத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10,000 வெள்ளி அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் சிறை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 47(1)(c) மற்றும் 47 (4) ஆகிய பிரிவுகளின் கீழ் அந்நபர்கள் குற்றத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரையில் பேராக், ஹுலு பேராக்-விலுள்ள கொம்பார்ட்மென் 359 ஹூத்தான் சிம்ப்பான் பண்டிங் வனப்பகுதிற்கு அனுமதியின்றி நுழைந்ததாக அந்நபர்கள் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

Related News