மக்கள் மனசஞ்சலப்படும் அளவிற்கு பொருட்களின் விலை உயர்ந்திருப்பது குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒப்புக்கொண்டுள்ளார். பொருட்களை வாங்கும் போது இந்த விலை ஏற்றத்தை மக்களால் அவர்களால் உணர முடிகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக அதன் தாக்கத்தை சமநிலைப்படுத்துதற்கு நிதி அமைச்சு சில கூடுதல் உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
விலையேற்றத்தை தடுக்கும் இவ் விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துமாறு சபா, சரவா விவகாரங்கள் மற்றும் சிறப்பு பணிகளுக்கான அமைச்சர் டத்தோ அர்மிசான் அலி மற்றும் உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின துணை அமைச்சர் ஃபுசியா சாலெ ஆகியோரை தாம் கேட்டுக்கொண்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தலைமையிலான வாழ்க்சைச் செலவின நடவடிக்கை மன்றமும் தனது சிறப்புக்கூட்டத்தை நடத்தி வருவதாக டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.








