Sep 27, 2026
Thisaigal NewsYouTube
பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி
தற்போதைய செய்திகள்

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

Share:

பிகேஆர் கட்சியின் பண்டான் கிளைத் தலைவர் ஸ்ரீ ரரபிசி ரம்லியைப் பதவியிலிருந்து நீக்க முயற்சி செய்யப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.

நேற்று நடைபெற்ற அக்கிளையின் ஆண்டு பொதுக்கூட்டத்தில், அவரை பதவிநீக்கம் அல்லது இடைநீக்கம் செய்ய முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக 42 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

ஆதரவாக 34 பேர் வாக்களித்த நிலையில், மிக நெருக்கடியான வாக்கு வித்தியாசத்தில் அவர் பதவியைத் தக்கவைத்துக் கொண்டார்.

இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீ ரபிசி ரம்லி இந்த ஆண்டு பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஸ்ரீ ரபிசி ரம்லியிடமிருந்து கிளை கட்டுப்பாட்டை கைப்பற்ற விரும்பிய சில உறுப்பினர்களால் இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டதாக பாண்டான் தொகுதி PKR இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் ஹக்கிமி ஜம்ரி தெரிவித்துள்ளார்.

எனினும், பாண்டான் PKR-இன் அடிமட்டத் தொண்டர்களில் பெரும்பாலோர் ரஃபிஸிக்கு விசுவாசமாகவே இருப்பதாக அவர் கூறினார்.

Related News