Jul 1, 2026
Thisaigal NewsYouTube
கிள்ளான் பள்ளத்தாக்கில் போதைப்பொருள் கும்பல் பிடிபட்டது: 19 பேர் கைது
தற்போதைய செய்திகள்

கிள்ளான் பள்ளத்தாக்கில் போதைப்பொருள் கும்பல் பிடிபட்டது: 19 பேர் கைது

Share:

கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணமோசடியில் ஈடுபட்டு வந்த ஒரு கும்பலை போலீசார் அதிரடியாக முறியடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி நடைபெற்ற சோதனைகளில் 7 பெண்கள் உட்பட மொத்தம் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோலாலம்பூர், தாமான் வாயூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட முதல் சோதனையில், போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்ட 4.9 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு நாட்டு நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், எக்ஸ்டசி மாத்திரைகள், கெட்டமைன், எரிமின் 5 உள்ளிட்ட பல வகை போதைப்பொருட்களும், அவற்றை தயாரிக்கும் கருவிகளும் பிடிபட்டன என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்பு இயக்குநர் டத்தோ ஹுசைன் உமர் கான் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, கெப்போங் மற்றும் கோலாலம்பூரின் பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் 17 பேர் சிக்கினர். இந்த கும்பல் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அடுக்குமாடி குடியிருப்புகளை போதைப்பொருள் சேமிப்பு மற்றும் விநியோக மையங்களாகப் பயன்படுத்தி வந்ததாக டத்தோ ஹுசைன் உமர் குறிப்பிட்டார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை