ஷா ஆலாம், ஆகஸ்ட்.14-
பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லியின் 12 வயது மகன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அரசியல் உட்பட அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரணை செய்து வருவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் ஷாஸேலி காஹார் தெரிவித்துள்ளார்.
ஆபத்தான ஆயுதத்தைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் தொடர்பில் குற்றவியல் சட்டம் 252 மற்றும் 324 ஆகிய பிரிவுகளின் கீழ் முழு வீச்சில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதுவரையில் நடத்தப்பட்ட விசாரணையில் எந்தவொரு துப்பும் கிடைக்கவில்லை என்ற போதிலும், அனைத்து கோணங்களிலும் தீவிர கவனம் செலுத்தப்பட்டு ஆராயப்பட்டு வருவதாக ஷாஸேலி காஹார் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








