செர்டாங், நவம்பர்.07-
பூச்சோங் ஜெயாவிலுள்ள, கடைத் தெருவில், வெளிநாட்டினர் என நம்பப்படும் ஆடவர் ஒருவர் நேற்று இறந்த நிலையில் காணப்பட்டார்.
நேற்று இரவு 8.30 மணியளவில் பொதுமக்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் அவரது சடலம் மீட்கப்பட்டதாக செர்டாங் காவல்துறைத் தலைவர் ஃபாரிட் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் அந்த ஆடவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
அந்த ஆடவர் அங்குள்ள கடையுடன் கூடிய குடியிருப்பில், அறை ஒன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கியுள்ளதும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு கே-9 பிரிவைச் சேர்ந்த மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, துப்பு துலக்கப்பட்டது.








