இம்மாதம் இறுதிக்குள் கோலாலம்பூர் மாநகரில் எல்.ஆர்.தி ரயில், கிளானா ஜெயா வழித்தடத்தில் ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கும் ஒரு ரயில் சேவை இயக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்ச அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.
கடந்த மாதம் முதல் தலா நான்கு பெட்டிகளை கொண்ட மூன்று புதிய எல்.ஆர்.தி ரயில்கள் இயக்கப்படுகின்ற காரணத்தினால் மூன்று நிமிடத்திற்கு ஒரு ரயில் சேவை இம்மாதம் இறுதியில் சாத்தியமாகும் என்று அமைச்ர் குறிப்பிட்டார்.
தவிர மேலும் 16 புதிய ரயில்கள் பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். "கோலாலம்பூர் கூடுதல் வாகனங்கள் 27" என்ற திட்டத்தின் கீழ் மேலும் 16 ரயில்கள் பெறப்பட்டு, அடுத்த ஆண்டு கட்டம் கட்டமாக சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.








