Jun 12, 2026
Thisaigal NewsYouTube
லெப்டோஸ்பைரோசிஸ் அச்சம் காரணமாக உலு பெண்டுல் பூங்கா மே 24 வரை மூடப்பட்டது
தற்போதைய செய்திகள்

லெப்டோஸ்பைரோசிஸ் அச்சம் காரணமாக உலு பெண்டுல் பூங்கா மே 24 வரை மூடப்பட்டது

Share:

லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிகளின் சிறுநீர் மூலம் பரவும் தொற்று நோயானது குறிப்பிட்ட பூங்காவில் பரவுவதாக சந்தேகக்கிப்படும் நிலையில், கோலா பிலா பகுதியில் உள்ள உலு பெண்டுல் வன சுற்றுச்சூழல் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்த பூங்காவில், வரும் மே 24-ஆம் தேதி வரையில், அனைத்து செயல்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சுத்திகரிப்பு பணிகள், முழுமையான சுத்தம் செய்தல் மற்றும் நீர் தர பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் நெகிரி செம்பிலான் வனத்துறை இயக்குனர் முகமது யுசைனி முகமது யூசோப் தெரிவித்துள்ளார்.

அப்பூங்காவிலிருந்து பரவியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு லெப்டோஸ்பைரோசிஸ் தொற்று சம்பவங்கள் குறித்த தகவலை கோலா பிலா மாவட்ட சுகாதாரத்துறை தங்களுக்கு அனுப்பியதாகவும் முகமது யுசைனி குறிப்பிட்டுள்ளார்.

Related News

லெப்டோஸ்பைரோசிஸ் அச்சம் காரணமாக உலு பெண்டுல் பூங்கா மே 24... | Thisaigal News