Jul 10, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை உஜாங்கின் 11-வது ‘உண்டாங்’காக ஃபாரிஸ் ஜொஹாரி அதிகாரப்பூர்வ நியமனம்
தற்போதைய செய்திகள்

சுங்கை உஜாங்கின் 11-வது ‘உண்டாங்’காக ஃபாரிஸ் ஜொஹாரி அதிகாரப்பூர்வ நியமனம்

Share:

நெகிரி செம்பிலானின் யாங் டி-பெர்துவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர், லுவாக் சுங்கை உஜாங்கின் 11-வது உண்டாங் தலைவராக பாரிஸ் ஜொஹாரியின் நியமனத்தை இன்று காலை இஸ்தானா பெசார் ஸ்ரீ மெனாந்தியில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார்.

பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்த விழாவில், புதிய உண்டாங், யாங் டி-பெர்துவான் பெசாருக்குத் தனது விசுவாச உறுதி மொழியை எடுத்துக்கொண்டதைத் தொடர்ந்து, துவாங்கு முஹ்ரிஸ் அவருக்கு ‘டத்தோ கிளானா பெத்ரா’ என்ற பட்டத்தை வழங்கி பிரகடனப்படுத்தினார்.

விழாவில் உரையாற்றிய யாங் டி-பெர்துவான் பெசார், "தலைவர்கள் அனைவரும் நெகிரி செம்பிலான் அரச பரிபாலனத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்; அரண்மனையுடன் நெருக்கமான மற்றும் மரியாதைக்குரிய உறவைப் பேண வேண்டும்" என நினைவுறுத்தினார்.

புதிய உண்டாங்காகப் பொறுப்பேற்றுள்ள 28 வயது ஃபாரிஸ் ஜொஹாரி, யுஐடிஎம் பல்கலைக்கழகத்தின் கணக்கியல் பட்டதாரி மற்றும் ஏசிசிஏ தகுதி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்