Dec 3, 2025
Thisaigal NewsYouTube
வேட்பாளர்கள் பெயர்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

வேட்பாளர்கள் பெயர்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும்

Share:

ஜோகூர், பூலாய் நாடாளுமன்றம் மற்றும் ம் சிம்பாங் ஜெராம் சட்டமன்றம் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் போட்டியிடக்கூடிய பெரிக்காத்தான் நேஷனலின் வேட்பாளர்கள் பெயர்களை அக்கூட்டணியின் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் அடுத்த வாரம் அறிவிக்கவிருக்கிறார்.
வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட்ட பின்னர் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் என்ற முறையில் முகைதீன், வேட்பாளர்களின் பெயர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று ஜோகூர் மாநில பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டத்தோ டாக்டர். சஹ்ருடின் ஜமால் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜுலை 23 ஆம் தேதி உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவுதீன் அயூப் காலமானதைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த பூலாய் நாடாமன்றத் தொகுதியிலும், சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதியிலும் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

Related News