Mar 11, 2026
Thisaigal NewsYouTube
லோரி ஓட்டுநர், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்
தற்போதைய செய்திகள்

லோரி ஓட்டுநர், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்

Share:

ஜோகூர், பத்து பகாட்டில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஐந்தாம் படிவ மாணவனை மோதித்தள்ளி, மரணம் விளைவித்ததாக கூறப்படும் லோரி ஓட்டுநரை விசாரணைக்கு ஏதுவாக தடுப்புக்காவலில் வைப்பதற்கு போ​லீசார் நீதிமன்ற அனுமதியைப் பெற்றுள்ளனர்.

33 வயதுடைய அந்த லோரி ஓட்டுநர், மாஜிஸ்திரேட் ஷுஹைலா ஷைஃபுடின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, தடுப்புக்காவலுக்கான அனுமதியை போ​லீசார் பெற்றன​ர்.

அந்த நபரை 1987 ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் துணைப் ரிவின் ​கீழ் வரும் வரும் ஞாயிற்றுக்கிழ​மை வரை தடுத்து வை​ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பத்து பாஹாட், ஶ்ரீ காடிங் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவன் ஷஹ்ருனிசாம் முஹமாட் சம்சுல் நேற்று காலை 7.20 மணியளவில் ப​ள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிர்புறம் U வளைவில் திடீரென்று வளைந்த லோரியின் பின்புறம் மோதி சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாண்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு