Oct 5, 2026
Thisaigal NewsYouTube

தாய்லாந்து செல்லும் மலேசியர்கள்: மூன்றாம் தரப்பு காப்பீடு பெற அறிவுறுத்தல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தாய்லாந்து செல்லும் மலேசியர்கள்: மூன்றாம் தரப்பு காப்பீடு பெற அறிவுறுத்தல்

தாய்லாந்துக்கு வாகனங்களில் செல்லும் மலேசியர்கள், அந்நாட்டில் சாலை விபத்து ஏற்பட்டால் மூன்றாம் தரப்பினரின் இழப்பீட்டு கோரிக்கைகளையும் உள்ளடக்கும் காப்பீட்டைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மலேசிய வாகன ஓட்டுநரின் தவறால் விபத்தில் ஒருவர் காயமடைந்தாலோ அல்லது உயிரிழந்தாலோ, பாதிக்கப்பட்டவருக்கோ உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கோ கணிசமான இழப்பீடு வழங்க வேண்டிய நிலை ஏற்படலாம் என சொங்க்லாவுக்கான மலேசிய துணைத் தூதரகத்தின் தலைமைத் தூதர் அஹ்மாட் ஃபாஹ்மி அஹ்மாட் சர்காவி தெரிவித்துள்ளார்.

மேலும், வழக்கமாக குற்றம் செய்தவருக்கு விதிக்கப்படும் தண்டனைக்கு அப்பால், விபத்தில் காயமடைந்தவருக்கோ உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கோ மலேசியர்கள் இழப்பீடு வழங்க வேண்டிய நிலையும் உள்ளது.

அந்த இழப்பீட்டுத் தொகை சிறியதாக இருக்காது என்றும், எனவே, போதுமான காப்பீடு இருந்தால் இழப்பீட்டுச் செலவுகளையும் அது ஈடு செய்ய முடியும் என்றும் அஹ்மாட் ஃபாஹ்மி தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி, சொங்க்லாவில் உள்ள மலேசிய துணைத் தூதரகத்தில் பெர்லிஸ் பத்திரிக்கையாளர் சங்க பிரதிநிதிகள் மேற்கொண்ட மரியாதை நிமித்தமான சந்திப்பின்போது அஹ்மாட் ஃபாஹ்மி இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மாணவி ஐரின் சோஃபியா கொலை செய்யப்பட்ட இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லை: கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தகவல்

மாணவி ஐரின் சோஃபியா கொலை செய்யப்பட்ட இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லை: கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தகவல்

போலி ஜப்பானிய காரை பயன்படுத்திய இருவர் - பல கிலோமீட்டர் துரத்திப் பிடித்த போலீசார்

போலி ஜப்பானிய காரை பயன்படுத்திய இருவர் - பல கிலோமீட்டர் துரத்திப் பிடித்த போலீசார்

குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலை புகார் செய்ய எளிய வழி தேவை – சுஹாகாம்

குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலை புகார் செய்ய எளிய வழி தேவை – சுஹாகாம்

பத்து கவான் பெட்ரோல் நிலையத்தில் எரிபொருளில் தண்ணீர் கலக்கவில்லை - அமைச்சு உறுதி

பத்து கவான் பெட்ரோல் நிலையத்தில் எரிபொருளில் தண்ணீர் கலக்கவில்லை - அமைச்சு உறுதி

“என் மகளுக்கு நீதி வேண்டும்” – கொலை செய்யப்பட்ட ஐரினின் தந்தை உருக்கம்

“என் மகளுக்கு நீதி வேண்டும்” – கொலை செய்யப்பட்ட ஐரினின் தந்தை உருக்கம்

பத்து காவான் பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் நிரப்பிய வாகனங்களில் கோளாறு? - அமைச்சு விசாரணை

பத்து காவான் பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் நிரப்பிய வாகனங்களில் கோளாறு? - அமைச்சு விசாரணை