Oct 17, 2026
Thisaigal NewsYouTube

Bagan Dalam- மில் உற்சாகத்துடன் தீபாவளி ஒளியூட்டு விழா

திசைகள் செய்திப்பிரிவு
Share:
Bagan Dalam- மில் உற்சாகத்துடன் தீபாவளி ஒளியூட்டு விழா

பினாங்கு,அக்டோபர் 26-

தீபாவளி திருநாள் இந்தியச் சமூகம் கொண்டாடும் பண்டிகையாக இருந்த போதிலும் இருளை அகற்றி ஒளியை வரவழைக்கும் அதன் முக்கியத்துவமானது எல்லா சமூகங்களுக்கும் பொருந்தும் வகையில் பினாங்கு, Bagan Dalam சட்டமன்றத் தொகுதியில் அதன் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் முன்னலையில் தீபாவளி அலங்கார விளக்குகளை பொருத்தும் அதன் ஒளியூட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

டிஏபி பொதுச் செயலாளரும் Bagan நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங், அதிகாரப்பூர்வமாக இந்த ஒளியூட்டு விழாவைத் தொடக்கி வைத்தார்.

Bagan Dalam சட்டமன்ற சேவை மையத்தின் ஏற்பாட்டில் Bagan Dalam,டத்தோ ஹாஜி அகமது படாவி திடலில் திறந்த வெளியில் நேற்றிரவு நடந்தேறிய தீபாவளி ஒளியூட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக லிம் குவான் எங்குடன், ஜெலுத்தோங் எம்.பி. RSN ராயர், செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன், பாகன் ஜெர்மல் சட்டமன்ற உறுப்பினர் சீ யீ கீன், செபராங் பேராய் மாநகர் மன்ற உறுப்பினர்களான லிங்கேஸ்வரன் சார்மர், இங் யீ சியாங், சோங் வெய் ஹூங் ஆகியோருடன் இயக்கப்பொறுப்பாளர்களும், பொது மக்களும் இந்நிகழ்வில் திரளாக கலந்து கொண்டனர்.

எங்கும் கண்ணைக்கவரும் ஒளிவெள்ளம் என்று சொல்லும் அளவிற்கு டத்தோ ஹாஜி அகமது படாவி திடலே அலங்கார விளக்குகளினால் மின்னும் பூஞ்சோலையைப் போல் தோற்றம் அளித்தது, பார்ப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

இந்த ஒளியூட்டு விழா, ஒரு லிட்டில் இந்தியா தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஐந்து அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்டு, நிகழ்விற்கு மெருகூட்டப்பட்டதாக Bagan Dalam சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் தமது உரையில் குறிப்பிட்டார்.

இது தீபாவளியை வரவேற்கும் நிகழ்வு என்றாலும் ஓரிட மக்களின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் விதைக்கும் ஓர் அடையாள நிகழ்வாக விளங்குகிறது என்று குமரன் கிருஷ்ணன் குறிப்பிட்டார்.

இந்த ஒளியூட்டும் விழாவிற்கு சிறப்பு வருகை புரிந்து, நிகழ்வை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த லிம் குவான் எங்கிற்கும், இதர பிரமுகர்களுக்கும், வருகையாளர்களுக்கும் குமரன் கிருஷ்ணன் தமது நன்றியை பதிவு செய்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
15 வயதுக்குட்பட்டோரிடம் போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு – தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும்

15 வயதுக்குட்பட்டோரிடம் போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு – தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும்

சுங்கை பூலோவில் மீண்டும் போட்டியிடுவது குறித்து ரமணன் நம்பிக்கை – இறுதி முடிவை மக்கள் எடுப்பார்கள்

சுங்கை பூலோவில் மீண்டும் போட்டியிடுவது குறித்து ரமணன் நம்பிக்கை – இறுதி முடிவை மக்கள் எடுப்பார்கள்

பினாங்கில் மின்சாரப் பேருந்து சேவை தொடக்கம் – வெளிநாட்டினருக்குப் பொதுப் போக்குவரத்தில் தடை விதிக்க முடியாது

பினாங்கில் மின்சாரப் பேருந்து சேவை தொடக்கம் – வெளிநாட்டினருக்குப் பொதுப் போக்குவரத்தில் தடை விதிக்க முடியாது

அட்டேக் பட்டதாரிகளுக்கு 98 விழுக்காடு வேலைவாய்ப்பு – வரலாற்றுச் சாதனை படைத்த மனிதவள அமைச்சு

அட்டேக் பட்டதாரிகளுக்கு 98 விழுக்காடு வேலைவாய்ப்பு – வரலாற்றுச் சாதனை படைத்த மனிதவள அமைச்சு

பள்ளிகளில் சந்தேகப் பொட்டலங்கள் – பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்வி அமைச்சர் வலியுறுத்தல்

பள்ளிகளில் சந்தேகப் பொட்டலங்கள் – பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்வி அமைச்சர் வலியுறுத்தல்

துறைமுகங்கள், ரயில் பாதைகள், நெடுஞ்சாலைகளிலும் 5ஜி சேவை – அளவீட்டு முறையை மறுஆய்வு செய்ய மலேசியா திட்டம்

துறைமுகங்கள், ரயில் பாதைகள், நெடுஞ்சாலைகளிலும் 5ஜி சேவை – அளவீட்டு முறையை மறுஆய்வு செய்ய மலேசியா திட்டம்