Oct 16, 2026
Thisaigal NewsYouTube

கம்யூனிஸ சிந்தாந்தம், உணவக உரிமையாளர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கம்யூனிஸ சிந்தாந்தம், உணவக உரிமையாளர் கைது

கோலாலம்பூர், டிச.6-


உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மூலமாக கம்யூனிஸ சிந்தாந்தத்தை பரப்பியதாக கூறப்படும் உணவக உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

கிள்ளானில் ஓர் உணவகத்தை நடத்தி வரும் அந்த உரிமையாளர், கடந்த புதன்கிழமை இரவு 10 மணியளவில் கிள்ளான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் பிரிவு கைது செய்து இருப்பதாக ஐஜிபி குறிப்பிட்டுள்ளார்.

அந்த உணவகத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் திடீர் சோதனையை நடத்தினர். அதில் 20 வயது உணவக உரிமையாளர் கைது செய்யப்பட்டதாக டான்ஸ்ரீ ரஸாருடின் தெரிவித்தார்.

வாக்கையாளர்களுக்கு உணவு பரிமாறும் உபகரணங்களில் அந்த உணவக உரிமையாளர் மறைமுகமாக கம்யூனிஸ சிந்தாந்தத்தை சித்தரிக்கும் அம்சங்ளை புகுத்தியிருப்பது தொடர்பாக அண்மையில் காணொளி ஒன்று பரவலாக பகிரப்பட்டது. அந்த காணொளி தொடர்பில் போலீஸ் புகார் அளிக்கப்பட்டதாக ஐஜிபி மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →