கிழக்கு கரையோர மாநிலத்தை சேர்ந்த பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களை கடிப்பதாக கூறப்படும் புகார் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்படும் என்று கல்வி துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக கூறப்படும் மாணவன் ஒருவன் தெரிவித்துள்ள புகார் அடிப்படையில் இவ்விவகாரம் தற்போது ஆராயப்பட்டு வருவதாக துணை அமைச்சர் குறிப்பிட்டார்.
அந்த குற்றச்சாட்டில் உண்மையிருக்குமானால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். ஆசிரியர் கடித்ததால் தமது ஆறு வயது மகன் பள்ளிக்கு செல்ல மறுக்கிறான் என்று மாது ஒருவர் தெரிவித்துள்ள புகார் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என்று லிம் ஹுய் யிங் குறிப்பிட்டார்.
மாணவர்களின் வாய், காது மற்றும் கைகளில் அந்த ஆசிரியர் கடிப்பதாகவும், சில மாணவர்கள் அந்த ஆசிரியரின் பற்கடிகளுக்கு ஆளாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related News

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி


